• Sep 20 2024

நடிகர் டி.ராஜேந்தர் தற்போது எப்படி உள்ளார்..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட நடிகர், இயக்குநர், பாடகர், இசைக் கலைஞர், தமிழக அரசியல்வாதி என்று பல திறமைகளை கொண்டவர் தான் நடிகர் டி ராஜேந்தர். பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் நடிகர் ராஜேந்தர் அடுக்குமொழி வசனம் பேசுவதில் மிகச் சிறந்தவர் ஆவார்

இவரைப் போலவே இவரது மகன் சிலம்பரசன் சினிமாவில் சிறுவயதிலேயே நுழைந்து சாதித்துள்ளார். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

எனினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக டி.ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவரது உடல் நிலை பற்றி அப்டேட்களை சிம்பு கொடுப்பார். இதனிடையே தனது தந்தையின் மேல் சிகிச்சைகாக அமெரிக்காவிற்கு அழைத்து சென்றிருந்தார்.

அத்தோடு அவருக்கு மேல் சிகிச்சை எல்லாம் முடிந்து நலமாகியுள்ள நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் டி.ராஜேந்தர் அவரின் இரு மகன்களான சிலம்பரசன் மற்றும் குறளரசன் இருவருடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement