• Sep 20 2024

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் எப்படி உள்ளது..? உதயநிதி கொடுத்த விமர்சனம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு 3 வது முறையாக நடித்துள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல முக்கிய நட்ச்சத்திரங்கள்  நடித்துள்ளனர்.இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே சிம்பு, ஏஆர் ரஹ்மான் மற்றும் கவுதம் மேனன் ஆகிய 3 பேரின் கூட்டணியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி பெரும் ஹிட்டடித்தது. இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் மூலம் இந்த மூவர் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அத்தோடு இப் படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்ற நிலையில் இன்று இந்தப் படம்  பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை திரையரங்குகளில் சிம்புவின் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெந்து தணிந்தது காடு படம் குறித்து தனது ரிவ்வியூவை கொடுத்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கவுதம் மேனன், சிம்பு காம்போவில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பெரிய படமாக வந்துள்ளது. இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் இருக்கும். சிம்பு முத்துவாக பட்டையை கிளப்பியுள்ளார். ஒவ்வொரு ஃபிரேமிலும் ஜிவிஎம்மின் ஸ்டைல் தெரிகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்களும் சூப்பர் என வெந்து தணிந்தது காடு படத்திற்கு தனது பாஸிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இதனால் சிம்பு ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர்.




Advertisement

Advertisement