ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்ஸ்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்தப் படத்தில் ஹீரோயினாக சித்தி இதானி, அம்மாவாக ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும் இப்படத்தின் ஷுட்டிங் பணிகள் முடிந்து ரிலீஸிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் இந்தப் படம் செப்டம்பர் மாதம் 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டீசர், பாடல்கள், போஸ்டர்கள் ஆகியன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மேலும் இப்படத்திற்காக தனது தோற்றத்தை இளம் வாலிபனாக மாற்றி நடத்தியுள்ளார் சிம்பு. அதற்காகவே இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை சமீபத்தில் படக்குழுவுடம் நடிகர் சிம்பு பார்த்துள்ளார்களாம். மேலும் படத்தை பார்த்து முடித்துவிட்டு, படம் பிரமாதமாக வந்துள்ளது என கூறிவிட்டு, இயக்குநர் கவுதம் மேனனை கட்டிபிடித்துவிட்டு பாராட்டியுள்ளாராம்.
காதல், ஆக்ஷன் என இரண்டிலும் படம் பட்டையை கிளப்பியுள்ளது என்றும், கண்டிப்பாக சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் அடுத்த வெற்றி படமாக வெந்து தணிந்து காடு அமையும் என்று தகவல் கூறுகின்றனர்.
Listen News!