• Sep 22 2024

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தர் எப்படி உள்ளார்? வெளியானது தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் டி ராஜேந்தர். இவர் நடிப்பில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் அண்மையில் இலங்கையின் நிலை குறித்து ஒரு பாடலையும் பாடி இருந்தார். இவ்வாறு படப்பிடிப்புகளில் படு பிஸியாக இருந்து வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இவ்வாறுஇருக்கையில் அவரது சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக சிம்பு ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டார்.

அதன்படி சிம்பு மருத்துவ ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில் இன்று டி.ராஜேந்தர் அவர்கள் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறாராம்.

மேலும் முழுமையாக குணமடைந்த பிறகே அவர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement