இயக்குனர் எஸ். அருண்குமார் இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சித்தா'. இப்படத்தில் நடிகர் சித்தார்த் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இன்னும் இரண்டு நாள்களில் திரைக்கு வரவிருக்கும் இத்திரைபடத்தை வெளியீட்டுக்கு முன்பாக பார்வையிட்ட சினிமா பிரபலங்கள் சித்தா படம் குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
நடிகர் சித்தார்த் தயாரித்திருக்கும் இப்படமானது நாளை மறுதினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கின்றது. நாயகனுக்கும், அவரது அண்ணன் மகளுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தியதாக இப்படம் அமைந்துள்ளது.இதனை முன்னிட்டு இப்படத்தின் பிரிமியர் ஷோ பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில்" சித்தா" படத்தை பார்த்தவர்கள் என்ன கூறியுள்ளனர் எனப் பார்க்கலாம்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சித்தா திரைப்படம் தொடர்பில் தனது கருத்துக்களை ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார். அதாவது " இந்த வருடத்தின் சிறந்த படமாக இது இருக்கும் . படத்தில் நடித்த எல்லோரும் ரொம்ப சூப்பராக நடித்திருக்கிறார்கள். சித்தார்த் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கட்டாயம் எல்லோரும் பார்க்கவேண்டிய திரைப்படம். பெண்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டும். படம் ரொம்ப அருமை " என்று கூறிஉள்ளார் .
மேலும் 'சித்தா' திரைப்பட இயக்குனர் அருண்குமார் இது தொடர்பில் கூறுகையில் " இது நாங்க ரொம்ப நாட்களா எதிர் பார்த்த திரைப்படம், ஆடியன்ஸோட காமென்ஸ் கேட்டு ரொம்ப சந்தோசமா இருக்கு, சித்தார்த்துக்கு ரொம்ப நன்றி அவர் இல்லனா இந்த படமே இல்ல. என் டீம்ல இருக்குற எல்லாருக்கும் ரொம்ப நன்றி " என்று தெரிவித்துள்ளார். மேலும் சித்தா திரைப்பட நடிகர் சித்தார்த் படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். " சித்த திரைபடம் எதிர்வரும் செப்டெம்பர் 28-ஆம் திகதி ரிலீஸ் ஆகபோது , சித்தப்பா என வார்த்தையின் சுருக்கம் தான் "சித்தா" இந்த திரை படத்தை நானே தயாரித்து நடித்து இருக்கிறேன்.
இப்படத்தின் இயக்குனர் அருண்குமார் மிக சிறந்த படைப்பாளி அழகான கனவை உருவாக்கி அதை நிஜமாகி இருக்கிறார். இந்த படத்தை பார்த்தவர்கள் இந்த வருடத்தின் மிக சிறந்த திரைப்படம் என்று சொல்லுகிறார்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு . சித்தா படத்தை பயப்பிடாமல் குடும்பத்தோடு சென்று சென்று பாருங்கள். நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகி இருக்காங்க . கட்டாயமாக படத்தில் நடித்த குழந்தைகளுக்காக படம் பாருங்க" என்று கூறியுள்ளார். இவ்வாறான கருத்துக்களை கேட்டுக் போது உண்மையிலே சித்தா இந்த வருடத்தின் சிறந்தபடமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .
விறுவிறுப்பான த்ரில்லர் படம் இது... அடுத்த 20 வருசம் இப்படிதான் டிராவல் பண்ண போறேன்.. - சித்தார்த் பகிர்ந்த தகவல்#Chithha | #Siddharth | #CHITHHAfromSEP28 | #ChithhaSiddharth | #PressMeet | #NewsTamil24x7 pic.twitter.com/S8szbbC4sr
Listen News!