• Nov 14 2024

விரல்கள் அகற்றப்பட்ட விஜயகாந்த தற்போது எப்படியுள்ளார்…? ரசிகர்களுக்கு வெளியான செய்தி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் நடித்து தன் திரைப் பயணத்தை ஆரம்பித்தவர் கேப்டன் விஜயகாந்த். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை, தூரத்து இடிமுழக்கம், உழவன்மகன் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார்.

இவர் கிட்டத்தட்ட 150 திரைப்படங்கள் மேலாக நடித்துள்ளார் இவ்வாறு சினிமாவில் பிசியாக கலக்கி வந்த கேப்டன் விஜயகாந்த் பின்னர் அரசியலில் இணைந்தார். அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டிருந்த வேளையில் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டார். இதனால் தற்பொழுது அரசியலிலும் இருந்து ஓய்வெடுத்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் கடந்த சில வருடங்களாக வெளியில் செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கின்றார் விஜயகாந்த்.

கடந்த வாரம் விஜயகாந்திற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விஜயகாந்தின் காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டன. எனவே விஜயகாந்த் பூரண நலம் பெற்று வீடு திரும்ப ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரும் பிரார்த்தனை செய்தனர்.

இந்நிலையில் விஜயகாந்த் தற்போது சிகிச்சை முடிந்து நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சார்ந்தவர்கள் மகிழ்ச்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement