இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கட்டா குஸ்தி .விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து உள்ளார்.
இப்படம் இன்று கட்டா குஸ்தி என்கிற பெயரில் தமிழிலும், மட்டி குஸ்தி என்கிற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில்,இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
#GattaKusthi is Hilarious. 🎉🥳. Aishwarya Lekshmi's ROFL max Marana mass Transformation going to be the talk of the town 🤣💥🔥. All center will go Gaga for this. Respect @TheVishnuVishal bro for accepting this role👏👌.
Congrats Director @ChellaAyyavu @editor_prasanna & team. pic.twitter.com/VUAgRjUjXH
அதன்படி படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “கட்டா குஸ்தியில் விஷ்ணு விஷால் நன்றாக நடித்து இருக்கிறார். காமெடியும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கருணாஸை இந்த மாதிரியான ரசிக்கும்படியான கதாபாத்திரத்தில் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. படத்தின் ஹைலட் ஐஸ்வர்யா லட்சுமி தான். பொன்னியின் செல்வனுக்கு பின் இவருக்கு அதிக ஸ்கோப் உள்ள படமாக இது அமைந்துள்ளது. அவர் அவரது கதாபாத்திரத்தை அழகாகவும், தனித்துவமாகவும் கையாண்டுள்ள விதம் அருமை” என குறிப்பிட்டுள்ளார்.
அதே போல இயக்குநர் ரத்னகுமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “கட்டா குஸ்தியில் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு காமெடி செய்து மரண மாஸ் காட்டியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். அனைத்து செண்டர் ஆடியன்ஸுக்கும் இப்படம் பிடிக்கும். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்த விஷ்ணு விஷாலுக்கு பாராட்டுக்கள். இயக்குநர் செல்லா அய்யாவு மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.
#GattaKusthi Decent entertainer. Vishnu Vishal good. Comedy worked well. Karunas performed well after longtime.
Highlight: #AishwaryaLekshmi after Ps-1 biggest scope to score in Gatta kusthi,she carried her character very beautifully and uniquely.#VishnuVishal #Thala
அதே போல ரசிகர் ஒருவர் “என்ஜாய் பண்ணி பார்க்கக்கூடிய கமர்ஷியல் படமாக கட்டா குஸ்தி உள்ளது. நல்ல காமெடி மற்றும் விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி இடையேயான ரொமான்ஸ் ரசிக்கும்படியாக உள்ளது. குறிப்பாக இண்டர்வெல் சீன் மாஸாகவும், நகைச்சுவை மிகுந்ததாகவும் இருந்தது. கருணாஸ் - முனீஸ்காந்த் காம்போவின் காமெடி ஒர்க் அவுட் ஆகி உள்ளது” என பதிவிட்டுள்ளார்.இவ்வாறாக படம் குறித்த நல்ல விமர்சனங்கள் குவிந்து வருவதைக் காணலாம்.
#GattaKusthi - An enjoyable commercial film with good dosage of comedy and romance between the lead pair @TheVishnuVishal and #AishwaryaLekshmi (the interval sequence is massy and laugh riot). Karunas and Munishkanth combo also clicks. Rating : 3.25 out of 5
Listen News!