• Sep 20 2024

வசூலில் சிகரம் தொட்ட 'ஆதிபுருஷ்'... PS-2 சாதனையை 3நாட்களில் முறியடித்து விட்டதா..? இதுவரை எத்தனை கோடி தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் க்ரித்தி சனோன், சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. அந்தவகையில் இப்படமானது இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக சமீபத்தில் வெளியாகியுள்ளது.


ஆனால், இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு, விமர்சனம், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் இவையெல்லாவற்றையும் முதல் நாளில் பார்த்த போது மிகவும் பரிதாபமாக இருந்தது. அதாவது ராமாயணத்தை மார்டன் வெர்ஷனில் பட்டி டிங்கரிங் செய்து, 2கே கிட்ஸ்களுக்காக எடுக்கப்பட்ட கார்ட்டூன் மூவி போல இருப்பதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்திருந்தனர். 


இந்நிலையில் ஆதிபுருஷ் திரைப்படம் தற்போது மாபெரும் வசூல் வேட்டை நிகழ்த்தி வருகின்றது. அதாவது இப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 300 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.


அந்தவகையில் இந்த வருடம் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படமே மொத்தமாக ரூ. 345 கோடி தான் வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement