கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். மேலும் இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
பின்ப பல படங்களில் நடித்த இவருக்கு உலகளவில் பிரபலமாக்கிய திரைப்படம் கே.ஜி.எப். ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகி இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பினை பெற்றது.
ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி முதன்முறையாக மாபெரும் வெற்றி பெற்றது என்றால் யாஷ் நடித்த “கே ஜி எப்” தான் . இந்தப் படம் வெளியாகி இதுவரை 1000 கோடி வசூலைக் கடந்த விட்டது.தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில் சாதனைகள் படைத்து வருகிறது
இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளனர். அதிலும் கதாநாயகனாக நடித்த யாஷ் என்பவருடைய மார்க்கெட் அதிகரித்துள்ளது.
அத்தோடு இவர் அடுத்து எப்படியான படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகவும் உள்ளனர். கே ஜி எப் 2 படத்திற்காக யஷ் ரூ. 20 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் மூலம் மாஸ் நாயகனாக வலம் வரும் யஷ் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 53 கோடி வரை வரும் என கணிக்கப்படுகிறது.
சொத்து மதிப்பு, சம்பளம் என பேசினாலும் யாஷ் அவர்களிடம் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது. அதாவது இல்லாதவர்களுக்கு உதவுவது, வரி கட்டுவது போன்ற விஷயங்களில் இவர் அனைவருக்கும் ஒரு உதாரணம் என்கின்றனர்.
பிறசெய்திகள்:
- பிரபல நிகழ்ச்சியில் நடிகர், தொகுப்பாளினி இடையே வெடித்த சண்டை-வைரல் வீடியோ..!
- பிரபல டிவி நடிகரை காதலிக்கும் ஏமி ஜாக்சன்? விரைவில் திருமணமா..!
- காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்த லோகேஷ் கனகராஜ்? கசிந்த வீடியோ..!
- காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தானாம்-விக்னேஷ் சிவன்
- “நானே வருவேன்” திரைப்படத்தில் இத்தனை பாடல்கள் இருக்கின்றதா?- முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!