சினிமாவைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல்வேறு திரைப்படங்களும் வெளிவந்த வண்ணம் தான் இருக்கின்றன. எத்தனை திரைப்படங்கள் வெளிவரினும் ஒரு சில திரைப்படங்களிற்கு மட்டும் அவை வெளியாகும் முன்பிருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்கள் கிளம்பத் தொடங்கி விடும்.
அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'பொன்னியின் செல்வன்'. இப்படமானது கல்கியின் எழுத்தில் உருவான பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. அதாவது பிரபல இயக்குநரான மணிரத்னம் இதனைப் படமாக பிரமாண்டமான முறையில் உருவாக்கியுள்ளார்.
இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரபு என முன்னணி நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஆனது சமீபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்வில் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் 30-ஆம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான காலத்தில் இருந்தே ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படம் குறித்த மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தின் சாட்டிலைட் உரிமையை ரூ. 25 கோடிக்கு சன் டீவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அதேபோன்று இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ. 100 கோடியில் அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!