• Sep 20 2024

எவ்ளோ நாளாச்சு சந்தானம் காமெடிக்கு சிரிச்சு.. டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சந்தானம் நம்பர் ஒன் காமெடியனாக இருந்து வந்த நிலையில், ஹீரோவாக மாறி சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை, எப்போதும் போலவே ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என நினைத்தே தொடர்ந்து காமெடி படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால், ஹீரோவாக சந்தானத்துக்கு சில படங்கள் மட்டுமே கைகொடுத்தன. மீண்டும் காமெடி நடிகராகவே சந்தானம் ஆகிவிடலாமே என பலரும் கோரிக்கை வைத்த நிலையில், டிடி ரிட்டர்ன்ஸ் படம் ஹீரோவாகவும் காமெடியனாகவும் சந்தானத்துக்கு செம கம்பேக் கொடுத்திருக்கிறது இந்த படம் என்று தான் சொல்ல வேண்டும்.


நேற்றைய தினம் வெளியாகியிருந்த இப்படத்தில் சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இப்படம் வெளியாகி ரசிகர்களிடையெ நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், நேற்று திரையரங்கில் வெளிவந்த டிடி ரிட்ர்ன்ஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 2.8 கோடிக்கும் மேல் வசூல் செய்து சிறந்த ஓப்பனிங் கொடுத்துள்ளது. இதனால் படக்குழுவினர் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement