லியோ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீரில் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கடந்த வாரம் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்கானதால், படப்பிடிப்பு தளத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.
இருந்தாலும், நடிகர் ,நடிகைகள் ஜாலியாக டூர் போனது போல பனிப்பொழிவுக்கு இடையே இருந்து புகைப்படங்களை எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வருகின்றனர். காஷ்மீரில் இருந்து நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி பல லைக்குகளை பெற்றது.
இந்நிலையில், லியோ படத்தில் இணைந்துள்ள மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், லியோ திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸூக்குள் வருமா? என்ற கேள்விக்கு, எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என மேத்யூ தாமஸ் கூறினார்.
மேலும், லியோ படத்தின் ஷூட்டிங் எத்தனை நாள் காஷ்மீரில் நடக்கும், நீங்கள் எத்தனை நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சிரித்துக்கொண்டே இருந்தார். சரி லியோ படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் அதற்காவது பதில் சொல்லுங்கள் என செய்தியாளர்கள் கெஞ்கி கேட்க, இதற்கு மேல் லியோ படம் குறித்து எதுவும் சொல்ல கூடாது. கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் என மேத்யூ தாமஸ் நச்சுனு பதில் அளித்தார். சும்மா சொல்லக்கூடாது லோகேஷ் நடிகர்களுக்கு நல்ல டிரைனிங் கொடுத்து இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Listen News!