• Sep 21 2024

டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் தெரியுமா..? வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.

இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.அத்தோடு இதில் எஸ்.ஜே. சூர்யா ,சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் ,குக்வித்கோமாளி சிவாங்கி என பலரும் நடித்து அசத்தி உள்ளார்கள்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு முதல் நாள் வசூலில் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வரை வசூலித்து மாஸ் செய்தது.

இதில் சிவகார்த்திகேயன்-எஸ்.ஜே.சூர்யா முதன் முறையாக கூட்டணி அமைத்து நடித்திருக்கிறார்கள், அவர்களது காட்சிகள் செமயாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

எனினும் தற்போது படம் வெளியாகி 3 நாள் முடிவில் ரூ. 33 கோடி வரை தமிழகத்தில் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

https://www.youtube.com/embed/XNvSpgoJYqg

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement