• Nov 14 2024

நஷ்ரியாவிற்கு இத்தனை வயது தானா..? அப்ப கணவருக்கு...வாயடைத்துப் போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் ஒரு நடிகையாக மாறி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நஷ்ரியா நசீம். இவர் தனது சிறுவயதில் மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

மலையாளத்தில் மட்டுமல்லாது தொடர்ந்து ‘ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ்’ எனப் பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தமிழ் எனப் பிஸியாக நடித்து வந்த நடிகை நஷ்ரியா மலையாள நடிகரான பஹத் பாசில் என்பவரை 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 வருடங்களிற்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் முகம் காட்டத் தொடங்கியிருக்கின்றார். அதாவது தெலுங்கு நடிகரான நானி மற்றும் நஷ்ரியா நடிப்பில் தற்போது ‘அடடே சுந்தரா’ என்ற படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தனது கணவரின் 40வது பிறந்தநாளை தானும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் நஷ்ரியா.அந்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.அது ரசிகர்களிடத்தில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement