82 கிலோவில் இருந்து 62 கிலோ எடைக்கு மாறியுள்ள கிரண் தன்னுடைய முந்தைய புகைப்படம் மற்றும் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு, உடல் எடையை குறித்த ரகசியம் பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கிரண், தற்போது வயது அதிகரித்து விட்டதாலும், உடல் எடை கூடியதாலும் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
சமீப காலமாக, சோனியா அகர்வால், அமலா பால், சமந்தா போன்ற திருமணம் ஆன நடிகைகளும், திருமணமாகி விவாகரத்தான நடிகைகள் கூட, தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருவதால், அதே போன்ற பட வாய்ப்பு தனக்கும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் கிரணும் எதிர்பார்ப்புடன் உள்ளார்
அத்தோடு பட வாய்ப்பை கைப்பற்ற, விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட துவங்கிய இவருக்கு, பின்னர் இதையே ஒரு சைடு பிஸ்னஸ் ஆக செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்கு என்றே ஆப் ஒன்றை உருவாக்கி அதில், கலக்கலான கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் சந்தாதாரர்களுக்கு தரிசனம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகின்றது.
உடல் எடை கூடி இவர் காணப்பட்ட கிரண், உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் தங்களுடைய அபிப்ராயத்தை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் கூறி வந்த நிலையில், கடின உழைப்புக்கு பின்னர், சுமார் 20 கிலோ எடையை குறைத்து, சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
உடல் எடையை எப்படி குறைத்தேன் என்கிற ரகசியத்தையும் ரசிகர்களிடத்தே பகிர்ந்து கொண்டுள்ள கிரண் இது குறித்து போட்டுள்ள பதிவில்... 82 கிலோ எடையில் இருந்து, தற்போது 62 கிலோவை எட்டியுள்ளேன். இதற்கான பயணம் மிகவும் கடினமாக இருந்தது.
அத்தோடு உடல் எடையை குறைப்பது எளிதான விஷயம் இல்லை. கடின உழைப்பு தேவை,உங்களுக்கு பிடித்த உணவை கை விட வேண்டும். நிறைய மனநிலை மாற்றங்கள் ஏற்படும், எரிச்சல்,முடி உதிர்தல்,தோல் சுருங்குதல் போன்ற மாற்றங்களுக்கு பின்னர் நான் என் சிறந்த தோற்றத்தைக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
Listen News!