• Nov 10 2024

’விசில் போடு’: காசு கொடுத்து வாங்கப்பட்டதா 30 மில்லியன் வியூஸ்? இதெல்லாம் ஒரு பிழைப்பா?

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் குவிந்தனர் என்பதையும் பார்த்தோம். 

தற்போது இந்த பாடலுக்கு 30 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்கள் கிடைத்துள்ளதை அடுத்து கோலிவுட் திரையுலகினர் ஆச்சரியமாக கூறும் நிலையில் தற்போது இன்னொரு செய்தியும் வந்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. 

பொதுவாகவே விஜய் ஒரு விளம்பரப் பிரியர் என்றும் அவர் தன்னை பற்றிய பாசிட்டிவ் செய்திகள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் 'கோட்' படத்தின் சிங்கிள் பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட ஐடி நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்ததாகவும் அந்த ஐடி நிறுவனத்தினர் ஏராளமான பார்வையாளர்களை பெறும் வகையில் டெக்னாலஜி மூலம் கொண்டு வந்துள்ளனர் என்றும் அதனால் தான் இந்த பாடல் 30 மில்லியன் பார்வையாளர்கள் குவிந்ததாக கூறப்படுகிறது. 

இதற்காக விஜய் தரப்பிலிருந்து பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் அதே நேரத்தில் இதுபோல் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க காசு வாங்கிக் கொண்டு வேலை செய்யும் ஒரு கூட்டம் இருக்கிறது என்பது மட்டும் உண்மை என்று கூறப்படுகிறது. 

அப்படி ஒரு கூட்டத்திடம் தான் விஜய் பணம் கொடுத்து இந்த 30 மில்லியன் பார்வையாளர்களை பெற்றாரா? அல்லது உண்மையாகவே இந்த பாடலுக்கு பார்வையாளர்களுக்கு கிடைத்தார்களா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இருப்பினும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இதெல்லாம் ஒரு பிழைப்பா? என கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் விஜய் மீதுள்ள பொறாமையால் இதுமாதிரி கதை கட்டி விடுகின்றனர் என்றும், அவருக்கு இருக்கும் புகழுக்கு காசு கொடுத்து வியூஸ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவரது மதிப்பு இன்னும் ஒருசிலருக்கு தெரியவில்லை என்ற கமெண்ட்ஸும் வந்து கொண்டிருக்கிறது.


Advertisement

Advertisement