• Nov 14 2024

லியோ படத்தில் விஜய் - த்ரிஷா கம்போ எப்படி இருக்கும்? - BGI விருது நிகழ்வில் த்ரிஷா கொடுத்த மாஸ் அப்டேட்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விருது வழங்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் ராங்கி திரைப்படங்களில் நடித்தமைக்கான இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதை நடிகை திரிஷா வழங்கப்பெற்றார். இந்த விருதை த்ரிஷாவுக்கு முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்கி சிறப்பித்தார்.

அத்துடன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துவரும் த்ரிஷாவிடம், “இந்த படத்தில் கிளைமாக்ஸ் வரை இருப்பீர்களா?” என தொகுப்பாளர்கள் பாலா, மணிமேகலை கேட்க, “இயக்குநரிடமே கேளுங்க.. அவரும் இங்தான் இருக்காரு” என பேசினார்.

தொடர்ந்து விஜய் குறித்து பேசியவர், “அனைவருமே கேட்டிருந்தார்கள் விஜய்யும் நீங்களும் மீண்டும் எப்போது இணைவீர்கள் என கேட்டார்கள். ரொம்ப ஆசையா இருக்கு என்றார்கள். 

ஏனென்றால் நாங்கள் நான்கு படங்கள் நடித்துவிட்டோம். லோகேஷ்க்கு நன்றி. ஆனால் அந்த 4 படம் மாதிரி இது இருக்காது; இது வித்தியாசமா இருக்கும். அதே சமயம் அந்த கெமிஸ்ட்ரி (விஜய் & த்ரிஷா இடையிலான) மாறாமல் இருக்கும்!” என்று பேசினார்.  இதைக்கேட்ட ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். இதன் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.


Advertisement

Advertisement