கடந்த வாரம் பிரபல ஹிந்தி நடிகர் அமீர்கார் நடிப்பில் வெளியாகிய திரைப்படட தான் “லால் சிங் சத்தா”.இப்படம் ஹாலிவுட்டில் டாம் ஹாங்க்ஸ் நடித்து புகழ்பெற்ற படமான “ஃபாரஸ்ட் கம்ப்” படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை ஹிந்தியில் மாத்திரம் இல்லாது தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிட்டனர்.இந்த நிலையில் இப்படம் வெளியாகிய நாளிலிருந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.
படம் வெளியாகும் முன்னே படத்தை புறக்கணிப்பதாக நெட்டிசன்கள் பலரும் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில் வசூலில் படம் தோல்வியை சந்தித்துள்ளது. ரேட்டிங்கும் குறைவாக உள்ளது.
இந்நிலையில் மற்றொரு பாலிவுட் பிரபலமான ஹ்ரித்திக் ரோஷன், லால் சிங் சத்தா படம் சிறப்பாக உள்ளதாகவும், அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் கோபத்தை ஹ்ரித்திக் ரோஷன் பக்கம் திருப்பிய நெட்டிசன்கள் ஹ்ரித்திகின் அடுத்து வர உள்ள பாலிவுட் படமான “விக்ரம் வேதா”வை புறக்கணிக்க வேண்டும் என ட்விட்டரில் #BoycottVikramVedha என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.
தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்தான் இந்த விக்ரம் வேதா படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!