• Sep 21 2024

பிரபல தமிழ் இசையமைப்பாளருடன் ஹிருத்திக் ரோஷன்- விக்ரம் வேதா திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம் வேதா. இப்படம் வசூலில் மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் கடந்த சில மாதங்களாக இப்படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.தமிழில் இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஹிந்தியிலும் இயக்கி வருகின்றனர்.


ஹிரித்திக் ரோஷன் மற்றும் சயிப்அலிகான் ஆகிய இருவரும் விஜய் சேதுபதி மாதவன் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் 

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு இசை அமைத்த சாம் சிஎஸ் இந்திப் பதிப்புக்கு இசையமைத்து வருகிறார் என்றும் இந்த படத்தின் பின்னணி இசை பணியை அவர் முழுவதுமாக முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் 

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும்  செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் ஹிந்தியில் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் CS தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படத்தின் பின்னணி இசை பணிகளை நிறைவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள்  தற்போது பாலிவூட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement