• Sep 20 2024

ஹுரோவாகும் அரபிக்குத்து பாடலின் டான்ஸ் மாஸ்டர்- அதுவும் என்ன படத்தில் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 100 திரைப்படங்கள் வரை டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளவர் ஜானி மாஸ்டர்.இவர் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடித்த அலா வைகுந்தபுரம்லோ படத்தில் இடம்பெற்ற 'புட்ட பொம்மா'பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்திருந்தார்.

இப்பாடலின் நடனம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து,விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த 'பீஸ்ட்' படத்தில் வரும் 'அரபிக் குத்து', 'ஜாலியோ ஜிம்கானா' பாடலுக்கும்,  திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் 'மேகம் கருக்காதா' பாடலுக்கும் ஜானி மாஸ்டர் தான் நடனம் அமைத்திருந்தார். அப்படி ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த பல பாடல்களில் வரும் நடன அசைவுகள், இந்திய அளவில் ஹிட்டாகியும் உள்ளது.


இந்நிலையில், ஜானி மாஸ்டருக்கு ஹீரோவாகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.அதன்படி தெலுங்கு சினிமாவில் யத ரஜா தாதா பிரஜா என்னும் படத்தில் தான் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று ஆரம்பமானது.

ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்கும் இந்த திரைப்படத்தில், 'சினிமா பண்டி' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் விகாஸ் மற்றும் நடிகை ஷ்ரஸ்டி வர்மாவும் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தின் பூஜையில் நடிகர் சர்வானந்த், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மைத்துனனான ஆயுஷ் ஷர்மா, இயக்குநர் ஜே. கருண் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில், ஜானி மாஸ்டர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 


Advertisement

Advertisement