சன் மியூசிக் சேனலில் ஆங்கராக அறிமுகமாகி பின்னர், குக் வித் கோமாளி மணியாகி, இதனைத் தொடர்ந்து இன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் தொகுப்பாளினி தான் மணிமேகலை.
திடீரென குக்வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகியிருந்தார் மணிமேகலை. இதற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருப்பதுதான் என ஒரு சில வதந்திகளும் வெளியாகி இருந்தன. பின்னர் சில வாரங்கள் கழித்து குக் வித் கோமாளியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று ஹுசைன் மணிமேகலை தம்பதியின் பேன்ஸ் மீட் ஒன்றை நடத்தியது. அந்த சமயத்தில் குழந்தை ஒன்றை கொடுத்து அதற்கு டிரஸ் மாட்டி விடுமாறு ஹுசைன் மணிமேகலை ஜோடிக்கு டாஸ்க் ஒன்று அவர்களால் கொடுக்கப்பட்டது.
இதற்காக குழந்தையை மணிமேகலை வாங்கினார். அப்போது அவரை பார்த்ததும் அந்த குழந்தை உடனே அழத் தொடங்கியது. பின்னர் ஹுசைனிடம் சென்றதும் குழந்தை அழுகையை நிறுத்தியது. இதனால் ஹுசைன் ரொம்பவே குஷியானார்.
இதனைப் பார்த்துக் கடுப்பான மணிமேகலை அந்த குழந்தையுடன் செல்ல சண்டை போட்டார். பின்னர் ஒரு தாயாக மாறி மணிமேகலை அந்த குழந்தையை கவனித்துக் கொண்டதை பார்த்த ரசிகர்கள், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டு இன்றுவரை சந்தோசமாக வாழ்ந்து வருகின்ற உங்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்க வேண்டும் என இத் தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.
Listen News!