சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையாக ராக்கி சாவந்த். இவர், தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இவர் கடந்த மாதம் ஆதில் துரானியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக போட்டோக்களையும் திருமண சான்றிதழையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து திடீரென ஒருநாள் தனது கணவர் ஆதில், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனது வங்கியில் இருந்த பணத்தை தனக்கு தெரியாமல் எடுத்து செலவு செய்துவிட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் ஆதில் துரானியை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, ஆதில் மும்பை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.அப்போது, நீதிமன்றம் வந்த ராக்கி சாவந்த் தனது கணவர் ஆதில் கான் துரானியை ஜாமீனில் விடுவிக்க வேண்டாம் என்று மும்பை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆதில், தனது நிர்வாண வீடியோவை பணத்திற்காக விற்றுவிட்டதாகவும், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதன் பின் ஆதிலின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
சில நாட்களுக்குப் பிறகு, ஆதில் கான் துரானி மீது ஈரானியப் பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார்.சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்த போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆதில், தன்னை ஏமாற்றி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்திருந்தார். இப்பெண் அளித்த புகாரின் பேரில்,கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதில் துரானி மீது பதிவாகி உள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A மற்றும் பிரிவு 421 இன் கீழ் வரும் என்றும், இது தவிர, ஈரானியப் பெண்னை ஏமாற்றி பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், (IPC) பிரிவு 375 இன் கீழ் பெரும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும், இவை உண்மை என நிரூபிக்கப்பட்டால், ஆதில் கான் துரானிக்கு 15 ஆண்டுகள் வரை நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
Listen News!