• Nov 14 2024

உங்கள் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கின்றேன்-ரோஜா சீரியலில் இருந்து விலகவில்லை- முடிவை மாற்றிய சிபு சூர்யன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் கடந்த 2018 இல் இருந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா. இந்த சீரியலில் சிபு சூரியன், பிரியங்கா நல்காரி, வடிவுக்கரசி, ராஜேஷ், காயத்ரி, டாக்டர் சர்மிளா உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த சீரியலில் நடித்த பலர் மாறிவிட்டதோடு கதைக்களமும் பல விதங்களில் மாறி மாறி சென்று கொண்டிருக்கிறது. கிட்டதட்ட 1100 எபிசோட்களை கடந்து இந்த சீரியல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் லீட் ரோலில் நடிக்கும் சிபு சூரியன் மற்றும் பிரியங்கா தான்

ரொமான்ஸ், க்யூட்டான காதல் எக்ஸ்பிரஷன்ஸ் ஆகியவற்றால் இந்த ஜோடி பலவரின் ஃபேவரைட் onscreen Pair ஆக இருந்து வருகிறது. கிட்டதட்ட 1100 எபிசோட்களை கடந்து இந்த சீரியல் அர்ஜுனின் மாஸ் ஹீரோ வேலைகள், ரோஜா கொஞ்சி கொஞ்சி அர்ஜுன் சார் என கணவரை கூப்பிடுவது ஆகியன பார்ப்பதற்கே செம சூப்பராக இருக்கும்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முதல் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறப் போவதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் மாதத்துடன் இந்த சீரியலில் எனது ஷுட்டிங்கை முடித்துக் கொள்ள போகிறேன். நீண்ட யோசனை, தயாரிப்பு நிறுவத்துடன் பேசி எடுத்த பரஸ்பர முடிவிற்கு பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். நான் புதிய பயணத்தை துவங்க முடிவு செய்துள்ளேன்.

குட் ஃபை சொல்வது எப்போது எளிதான ஒன்றல்ல. ஆனால் சில சமயங்களில் அது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. அர்ஜுன் கேரக்டர் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். என்மனதிற்கு நெருக்கமான ஒன்று. உங்களின் தொடர்ந்த ஆதரவு, அளவில்லாத அன்பிற்கு என்னுடைய நன்றி. நீங்கள் இல்லை என்றால் இன்று நான் இங்கு இல்லை. தொடர்ந்து புதிய சுவாரஸ்யமான ப்ராஜக்ட்களுடன் தொடர்ந்து உங்களை என்டர்டைன் செய்வேன். எப்போதும் உங்களின் அன்பும், ஆதரவும், ஆசிகளும் எனக்கு தேவை என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரோஜா சீரியல் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சீரியலில் இருந்து விலகும் முடிவை மறு பரிசீலனை செய்து மீண்டும் சீரியலில் தொடர பலரும் சிபு சூரியனுக்கு கோரிக்கை வைத்தனர். சிபு சூரியன் லேட்டஸ்டாக பதிவிட்டுள்ள சோஷியல் மீடியாவில் கடந்த இரண்டு நாட்களாக ரசிகர்களிடம் இருந்து ஏராளமான போன் கால்கள், போஸ்ட்கள், மெசேஜ்கள், கோரிக்கைகள் என தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. என் மீது நீங்கள் காட்டும் அளவு கடந்த அன்பிற்கு நன்றி. உங்களின் அனைவரின் கோரிக்கையை ஏற்று ரோஜா சீரியலில் உங்களின் ஃபேவரைட் அர்ஜுன் சாராக தொடருவது பற்றிய யோசிக்கிறேன். சீரியலில் விலகும் முடிவையும் மறு பரிசீலனை செய்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement