தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகை ஷகீலா. கவர்ச்சி நடிகையாக வலம் வந்த இவர் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் பின்னரே தனக்கான ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.
இது வரை கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்ட இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே அம்மா என்ற ஓர் அடையாளத்தை பெற்றதோடு அனைவராலும் ரசிக்கப்பட்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்பொழுது யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது ஓர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் நான் செக்ஸ் படம் தான் நடிச்சிருக்கிறேன் ஆனால் நான் அவுத்துப் போட்டு நடிச்சதில்லை. எப்ப பார்த்தாலும் blue film நடிச்சிருக்கிறேன். என்று சில பேர் கூறுறாங்க blue film என்றால் என்ன என்று தெரியுமா? என்று தன்னை தவறாக பேசுறவங்களுக்கு கூறியிருக்கிறார்.
நான் என்னை நல்லவள் என்று சொல்லல நான் எனக்காக ஒன்றும் இப்படி பேசல உங்கட வீட்டில இருக்கிற குழந்தைகளை பாதுகாக்கவே விழிப்புணர்வாக இதை பற்றி பேசுறேன். ஏன் என்னோட படம் பார்ப்பதால் தான் உங்களுக்கு இதெல்லாம் தெரியுதா?- இதற்கு முதல் உலகத்தில செக்ஸ் என்ற ஒரு விஷயமே இல்லையா என்றும் கடுமையாக கேட்டுள்ளார்.
என்னோட படம் பார்த்து தான் நீங்க முறையா குழந்தை பெத்துகிறீங்க என்றால் சொல்லுங்க தயாரிப்பாளர்களின் காலில் விழுந்தாவது அந்த படங்களை திரும்ப வாங்கித் தாறேன். என்னைப் பற்றி கழுவி ஊத்திறவங்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை.
நான் பண்ணினது நடிப்பு உங்கட வீட்டில உள்ளவங்களை என்னோட படத்தை வந்து பாருங்க என்று இலவசமாக டிக்கெட் கொடுக்கல நீங்களா தான் வந்து பார்க்கிறீங்க புரோகிராம் பிடிச்சிருந்தா பாருங்க இல்லை என்றால் விடுங்க நான் நடிச்சது என்னோட குடும்பம் சாப்பிடோனும் என்றதால் தான் என்னோட குடும்பம் நல்லா இருக்க கிட்னியை விற்க சொன்னாலும் விற்பேன் அது என்னோட இஷ்டம் நான் யாரோட குடும்பத்தையும் அழிக்கல அதனால என்னோட வச்சிக்காதீங்க என்று தன்னை தவறாக சித்தரிப்பவர்களுக்காக கடுமையாக கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- ‘தளபதி67’ மாஸ் அப்டேட்களை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்…குஷியில் ரசிகர்கள்..!
- நயனும் விக்கியும் போகாத கோயிலே இல்லையா… மறுபடியும் வெளியான புகைப்படங்கள்..!
- நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பாடகி ஜோனிடா
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தர் எப்படி உள்ளார்? வெளியானது தகவல்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!