• Nov 19 2024

நானும் உயிரை மாய்த்து விட முடிவு பண்ணினேன், குறுட்டு தைரியத்தில் முடிவு எடுத்திட்டேன்- மாணவர்களுக்கு கமல்ஹாசன் சொன்ன அறிவுரை

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் கமல்ஹாசனுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

 இந்தப் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்துடன் தன்னுடைய தயாரிப்பில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோரின் படங்களை உருவாக்கி வருகிறார் கமல்ஹாசன்.இதனை அடுத்து ஷங்கரின் இந்தியன் 2 மற்றும் பிரபாசுக்கு வில்லனாக கல்கி 2898 AD படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் கமல்ஹாசன் அண்மையில் ஒரு கல்லுாரி நிகழ்வில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய இவர் மாணவர்கள் உயிரை மாய்த்துக்  கொள்வது குறித்து ஓபனாகப் பேசியுள்ளார். அதில் சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், இளைஞன் ஆன பின்னர் 20 வயது 21 வயது இருக்கும் போது சினிமாவே என்னை ஒதுக்கியது போல இருந்தது. அப்போது எனக்கும் உயிரை விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.


ஆனால், என்ன ஆகுதுன்னு பாத்துடலாம்னு ஒரு குருட்டு தைரியத்தி்ல் கடைசிவரை முயற்சி செய்ய முடிவெடுத்தேன் இப்போ உங்கள் முன் கமல்ஹாசனாக நிற்கிறேன். மரணம் அனைவரும் வாழ்விலும் ஒரு அங்கம். அது வரும் போது வரட்டும். நாமாக அவசரப்பட்டு விடக்கூடாது. இப்படியான  எண்ணத்தை தாண்டி வாழ்ந்தவர்கள் பலர் சாதனையாளர்களாக உள்ளனர் என்ன மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சிறு பிரச்சனைகளுக்காக பெரிய முடிவை எடுத்து விடக்கூடாது என்பதற்காகவும் உலகநாயகன் பேசிய பேச்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


Advertisement

Advertisement