• Sep 20 2024

எனக்கு எப்போதுமே கமல் சாரை தான் ரொம்ப பிடிக்கும்- ப்ரமோஷன் நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசிய நாகர்ஜுனா

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வெளியான திரைப்படம் தான் 'பிரம்மாஸ்த்திரா'.இப்படத்தில் ரன்பீர் கபூருடன், நாகர்ஜுனா, அமிதாப்பச்சன், ஆலியாபட் ஆகியோர்  இணைந்து நடித்துள்ளதோடு இப்படம் செப்டம்பர் மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

அத்தோடு இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியானது சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நாகர்ஜுனா மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். "சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவதைப் போல நெகிழ்ச்சியாக இருக்கும். எப்பவுமே சென்னை எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல்" எனத் தெரிவித்தார்.


 "கமல் சாரின் விக்ரம் திரைப்படம் பார்த்தேன், தமிழ் சினிமாவின் எல்லா வசூல் சாதனைகளையும் அடித்து நொறுக்கிவிட்ட விக்ரம், உண்மையாகவே சிறப்பான தரமான திரைப்படம். எனக்கு எப்போதுமே கமல் சாரை தான் ரொம்ப பிடிக்கும். அவர் தான் ரியல் ஹீரோ" என பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தைத் தொடர்ந்து படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் தற்பொழுது இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement