• Nov 17 2024

நானும் சாதாரண மனிதன் தான் சர்ச்சைகள் வியப்பாக இருக்கிறது - ஓபனாகப் பேசிய நடிகர் அஸ்வின்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்கிலும் சீரியல்களிலும் நடித்து வந்தவர் தான் அஸ்வின். இருப்பினும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் மூலமே ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.தொடர்ந்து கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் செம்பி. இத்திரைப்படம் டிசம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது.இப்படத்தில் நடிகை கோவை சரளாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். வயதான கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் கோவை சரளா ட்ரைலரில் வருவதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கி அதிகரித்துள்ளது.


இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடந்து முடிந்துள்ளது. அஸ்வின் குமார், கோவை சரளா, தவிர தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

அந்த வகையில் பிரபல சேனலுக்கு படக்குழுவினர் பேட்டியளித்திருந்தனர். அதில் அனைவரும் செம்பி படத்தை குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்தப் பேட்டியில் தனது சினிமா அனுபவம் குறித்து பேசிய அஸ்வின், "சினிமாவில் சில விஷயங்கள் செய்யக்கூடாதவை, செய்யக்கூடியவை என்று இருக்கின்றன. அவற்றை பற்றி இப்போதுதான் புரிந்து கொள்கிறேன். நானும் ஒரு சாதாரண மனிதனாகவே சினிமாவுக்கு வருகிறேன் எனும் போது சர்ச்சைகள் திடீரென எனக்கு புதிதாகவும், வியப்பாகவும் இருந்தது.


 என்னுடைய நோக்கமும் அப்படி இல்லை என்பதால் நான் இன்னும் அதிர்ந்தேன். மிகவும் உறுதுணையாக எனக்கு இருந்தது இன்னும் பலர் அப்படி இருந்தால் அதை எதிர்கொள்வது எளிமையாக இருந்திருக்கும். ஆனாலும் சில விஷயங்களை கற்றுக் கொள்கிறேன்.நான் இந்த இடத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தேன். இதற்காக பல தியாகங்கள் செய்திருக்கிறேன். அது பலருக்கும் தெரியப் போவதில்லை. ஆனால் இது போன்ற ஒரு விஷயம் பெரிதாகி விடுகிறது.

 ஒரு சினிமா வாய்ப்பு என்பது சாதாரணம் கிடையாது. இந்த இடத்திற்கு வருவதற்கு நான் நிறைய குறும்படங்கள், சுயாதீன படங்கள், ஆல்பம் பாடல்கள், வெப் சீரிஸ், துணை கதாபாத்திரங்கள் என பலவற்றை செய்திருக்கிறேன் அதனால் இவ்வளவு செய்து வரும் பொழுது திடீரென ஒரு விஷயம் இப்படி ஆகிவிடுகிறது என்னும்போது இன்னும் அது சிந்திக்க வைக்கிறது. மேலும் கற்றுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement