• Nov 14 2024

சித்தார்த் கூப்பிட்டால் அவருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வதற்கு நான் ரெடி... ஓப்பனாக பேசிய பிரபல நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சித்தார்த். இவர் 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து வரும் சித்தார்த் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். 


இந்நிலையில் பிரபல இளம் நடிகை ஒருவர் சித்தார்த் வாய்ப்புக் கொடுத்தால் அவருடன் படுக்கையைப் பகிரத் தயார் என்று கூறியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இன்றைய காலக்கட்டத்திலே சினிமாவில் பட வாய்ப்புக்காக நடிகைகளை அட்ஜஸ்மென்ட் செய்ய சொல்லி கட்டாயப் படுத்தும் ஒரு நிலை இருக்கின்றது. 

இவ்வாறான ஒரு நிலையில் இளம் நடிகை காயத்ரி ராமா ஓப்பனாக பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதாவது "சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கிறது. ஆனால் வாய்ப்பிற்காக யாரும் கட்டாயப் படுத்தக்கூடாது.

மேலும் எனக்கு சித்தார்த்தை ரொம்பவே பிடிக்கும், அவர்மேல் ஒரு க்ரஷ் இருக்கிறது. யாராவது அவருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் வாய்ப்புத் தருகின்றேன் என்று சொன்னால் நான் தயங்காமல் படுக்கையைப் பகிரத் தயார்" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் "உண்மையிலும் சித்தார்த் மேல் விருப்பப்பட்டு இப்படி ஒரு நிபந்தனையை விதித்தால் நான் மறுக்காமல் சம்மதிப்பேன். அத்தோடு அவர்களின் விருப்பத்துடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வது தப்பே கிடையாது" எனவும் கூறி இருக்கின்றார் காயத்ரி ராமா. 

ஆரம்பத்தில் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு எதிரான கருத்துக்களைக் கூறுகிவந்த நடிகை சித்தார்த் விஷயத்தில் இப்படி ஒரு கருத்தைக் கூறியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் இந்தக் கருத்தினைப் பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.

Advertisement

Advertisement