நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் சீதா ராமம்.
காதலை மையப்படத்தி உருவாகி இருக்கு இத்திரைப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.வைஜயந்தி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சி அஸ்வினி தத் வழங்கும் இப்படத்தை ஸ்வப்னா சினிமா எனும் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதையடுத்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், படத்தின் நாயகன் துல்கர் சல்மான், நாயகி மிருணாள் தாகூர், நடிகர் சுமந்த் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர்.
அப்போது ஒரு செய்தியாளர்,சீதா ராமம் வரலாற்றுத் திரைப்படமா? காதல் காவியா? என கேட்டார். இதற்கு பதிலளித்த துல்கர் சல்மான், காதலை கடிதம் மூலம் வெளிப்படுத்தும் 1960 காலகட்ட திரைப்படமாகும். நான் இதற்கு முன்னர் நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும், இதுபோன்ற வித்தியாசமான காதல் கதையில் நடித்ததில்லை. கதை நடக்கும் காலகட்டம், கதை களம், கதாபாத்திர பின்னணி என பல அம்சங்கள் சிறப்பாக இருக்கும் என்றார்.
இதையடுத்து, துல்கர் சல்மானிடம் கேள்வி கேட்ட பயில்வான் ரங்கநாதன், அது என்ன படத்திற்கு சீதா ராமம்னு பெயர் வெச்சி இருக்கீங்க என்று கேட்டார். அதற்கு பதிலளித்த துல்கர், படத்தில் என் கதாபாத்திரன் பெயர் ராமன், ஹீரோயின் பெயர் சீதா இதனால், இரு பெயரையும் சேர்த்து அப்படி பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றார். உடனே பயில்வான் எனக்கு குழப்பமா இருக்கு ராமமா? இல்லை நாமமா? அதற்கு அர்த்தம் என்ன சரியா சொல்லுங்க என தொடர்ந்து துல்கரிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டார்.இந்த கதையை நான் எழுதல,பெயரும் நான் வைக்கவில்லை, இந்த கேள்விக்கு இயக்குநர் தான் பதில் சொல்லவேண்டும் ஆனால், அவர் இப்போது இங்கே இல்லை என்று துல்கர் சல்மான் பதிலளித்தார். அப்போ, படத்தின் பெயர் என்னனு தெரியாமலே நடிச்சீட்டீங்களான என கிண்டலடிக்கும் விதமாக பயில்வான் ரங்கநாதன் கேட்டார். பயில்வானின் இந்த ஏடாகூட கேள்வியால் துல்கர் சர்மா கடுப்பானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- விஜயகாந்தை ஒருமுறை நேரில் பார்த்தால் செத்து விடுவேன்- கபாலி என்னும் அழைக்கப்படும் நடிகர் பொன்னம்பலத்தின் கோரிக்கை
- யானை படத்தின் விசாரணையை தள்ளி வைத்த நீதி மன்றம்- அட இது தான் காரணமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!