பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் மனோபாலா, நட்புக்காக படத்தின் மூலம் முழுநேர நடிகராக மாறினார். அதன் பின்னர் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இந்நிலையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் ரஜினிகாந்தும் தன்னுடைய இரங்கலினைத் தெரிவித்துள்ளார்.
அதாவது "பிரபல இயக்குநரும் நடிகருமான அருமை நண்பர் மனோபாலாவின் இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது. அவருடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!