மலையாள சினிமாவில் 80களில் தொடங்கி தற்பொழுது வரை முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்த வந்த இவர் தற்பொழுது வில்லன், துணை நடிகர்கள் போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்த வருகின்றார்.
இவரைத் தொடர்ந்து இவருடைய மகனான காளிதாஸூம் இப்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். அந்த வகையில் விக்ரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.
அதே போல கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்த ‘பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியலிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். மேலும் நடிகர் ஜெயராம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பண்ணையை நடத்தி வருகிறார்..
இந்த பண்ணைக்கு ஆனந்த் பண்ணை என்று பெயரும் வைத்துள்ளார். சுமார் 8 ஏக்கர் நிலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பசுக்களை ஜெயராம் தனது பண்ணையில் வளர்த்து வருகிறார். இதுக் குறித்த பல செய்திகள், பேட்டிகள் இணையத்திலும் வைரலாகியுள்ளன,. இந்நிலையில், ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் கௌரவித்துள்ளார்.
கேரள மாநில விவசாய துறை சார்பில் திருவனந்தபுரத்தில் 2 தினங்களுக்கு முன்பு விவசாய தின விழா நடைபெற்றது. இதில் சிறந்த விவசாயி என்ற விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஜெயராம் செய்து வரும் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
இதில் பேசிய நடிகர் ஜெயராம் ”பத்ம ஸ்ரீ விருதை விட விவசாயி விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.மேலும் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து முதல்வருக்கும் கேரள மாநில அரசுக்கும் நடிகர் ஜெயராம் தனது நன்றியை கூறியுள்ளார்.
Listen News!