• Sep 21 2024

தேர்தலில் உங்களை வெற்றி பெற்றதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன் - கமல்ஹாசனைப் பாராட்டிய அரசியல் பிரமுகர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி மெஹா ஹிட் வெற்றி பெற்று வரும் திரைப்படம் தான் விக்ரம். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்ததோடு விஜய்சேதுபதி பகத் பாசில் சூர்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இப்400 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

https://twitter.com/VanathiBJP/status/1543942634422812672

இதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கமல்ஹாசன் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.இந்நிலையில் திரைபிரபலங்கள் அனைவரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவிக்க தற்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு கமலை பாராட்டியுள்ளார்.

கமலை பாராட்டி அவர் பதிவிட்டவாறு, தேர்தலில் உங்களை வெற்றி பெற்றதற்காக நான் மகிழ்ச்சியடைகின்றேன். விக்ரம் படத்தை பார்த்தேன், உங்கள் கலைப்பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement