நடிகை ஹன்சிகா மோத்வானி தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் விஜய் ,சூர்யா, கார்த்தி, விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தொடர்ந்து சில காலம் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள சோலோ ஹீரோயினாக பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள திரைப்படம் தான் மஹா.
இந்த படம் ஹன்சிகாவின் 50வது திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்த நிலையில் ‘மஹா’ திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப்புரமொஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஹன்சிகா, இனி விரைவில் என் 60 வது படமும் வெளியோயாகும், இந்த மஹா படத்தில் நான் நடித்திருப்பது 105 நிமிடங்கள்தான்.
இப்படத்திற்காக சுமார் 20 நாட்களுக்ககு மேல் ஒத்திகை நடந்தது. அதனால் ஒரே டேக்கில் எடுகப்பட்டது. மேலும் எனக்கு திருமணம் எப்போது எனக் கேட்கிறார்கள். நான் ஏற்கனவே நடிப்புத் தொழிலை திருமணம் செய்துவிட்டேன். நடிப்பில் மட்டுமே என் முழு கவனம் எனத் தெரிவித்துள்ளார்.
ஜிப்ரான் இசையில் உருவான இந்த படத்தின் பாடல்கள் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறப்படுகிறது.அத்தோடு சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படமும் நல்ல வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பிற செய்திகள்
- மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்த நடிகைதான் ரொம்ப பிடிக்குமாம்? இயக்குநர் செல்வமணி கூறிய தகவல்..!
- வீட்டை விட்டு வெளியே போன பாக்கியா.. ராதிகா எடுத்த முடிவு- பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்
- சூர்யாவுக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை-அட இவரா..வைரலாகும் புகைப்படங்கள்..!
- தோழி நட்சத்திராவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து ஸ்ரீநிதி போட்ட பதிவு- என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
- இறந்த கணவர் பற்றி மீனாவின் லேட்டஸ்ட் பதிவு-ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!