• Sep 20 2024

'நான் ஒன்னும் பெரிய உத்தமி இல்ல'- பிரபல பேட்டியில் கொந்தளித்த விக்ரம் பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஜூன் 3 வெளியாகி மாஸ் ஹிட் கொடுக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக பிரமாண்டமாக உலகமெங்கும் ரிலீசானது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்திரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், ஷிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி, மாயா ஆகியோர் முதல் வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும், இப்படத்தில் சூர்யா கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வெளியாகி இருபத்தி ஒரு நாட்களைக் கடந்த நிலையில் உலகம் முழுவதும் 380 கோடி வரை வசூலித்துள்ளது இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விக்ரம் பட கதாபாத்திரம் குறித்து மாயா பேசியுள்ள வீடியோ என்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

விக்ரம் படத்தில் நடிகைகளுக்கு குறைவான காட்சிகள் இருந்தாலும் அவரது செயல்கள் ஒவ்வொன்றும் மனதில் பதியும்படி இருந்தது அந்த வகையில் விக்ரம் படத்தில் விபச்சாரியாக நடித்திருந்த மாயாவின் கேரக்டரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. குறிப்பாக படுக்கையறை காட்சியறையில் இவர் கொடுத்த எக்பிரஷன்களும், அதற்கு அனிரூத் போட்ட பின்னணி இசையும் வேறலெவல் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அப்பேட்டியில், அவர் கூறுகையில், “லோகேஷ் என்னிடம் வந்து எதார்த்தமாக நடிக்கனும்னு சொன்னார்.. எல்லாவற்றையும் ஈஸியா எடுத்துக் கொள்வது தான் என்னுடைய கேரக்டர். நான் ஒன்னும் பெரிய உத்தமி இல்ல.படத்தில் எனக்கு என்ன கேரக்டர் கொடுக்கிறாங்களோ அதை நன்றாக நடித்துக்கொடுப்பதுதான் என்னுடைய வேலை. அதைத்தான் விக்ரமிலும் செய்தேன்” என தைரியமாக பதிலளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement