தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தான் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் விஜய் இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருக்கிறது.
கடைசியாக இவர் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் விமர்சனத்தை மட்டும் நடித்து வராமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இவரது நடிப்பில் தற்பொழுது குஷி என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். காதல் கதையை மையமாக வைத்து உருவான இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய்தேவர்கொண்டா குஷி பட இசைவெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். அதாவது முனபு திருமணம் பற்றி பேசினாலே அதைத் தவிர்ப்பேன். இப்போது அதைப் பற்றி நிறைய விவாதிக்கின்றேன். நண்பர்களின் நல்ல வாழ்வையும் தொல்லையான வாழ்வையும் பார்க்கின்றேன். இரண்டுமே பொழுது போக்காக இருக்கின்றது. இப்போது திருமணம் பற்றிய பயம் இல்லை,திருமணம் செய்யலாம் என்று தோன்றுகின்றது என்று கூறியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் தமது வாழ்த்தினைத் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு பொண்ணு யார் என்றும் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!