பாலிவூட் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சோனு சூட், 1973 ஆம் ஆண்டு பிறந்த இவர் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டு ஈடுபட்டதோடு தமிழில் 1999ம் ஆண்டு வெளியான "கள்ளழகர்" என்ற திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களின் மூலமாக மக்களிடையே பிரபலமானார். நடிப்பதைத் தாண்டி சமூக சேவை செய்வதில் மிக ஆர்வமுள்ள இவர் கொரோனா காலத்தில் , பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்துகொடுத்தார்.
மேலும், உதவி வேண்டி பொதுமக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கிழக்கு டெல்லியை சேர்ந்த ஆராதனா ரதோட் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது சோனு சூட் பெயரால் இயங்கும் அந்த ஹோட்டலை காட்சிப்படுத்தும் அந்த வீடியோவை பகிர்ந்து," உங்களுடைய உதவியின் பலனாக கிழக்கு டெல்லியில் உள்ள எங்கள் குடியிருப்புப் பகுதியில் எனது அபார்ட்மெண்டிற்கு அருகில் ஒரு சிறிய உணவகம் செயல்பட்டு வருகிறது.
இவரின் சிறுதொழில் சிறப்பாக நடப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் உதவி கரம் இன்று அவருக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளது" என்று குறிப்பிட்டு நடிகர் சோனு சூட்டையும் டேக் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் சோனு சூட்டின் கவனத்தையும் இந்த வீடியோ ஈர்த்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- அஜித்தை அடிக்கடி கழுவி ஊற்றி வரும் ப்ளூசட்டை மாறன்- இப்படித் தான் உன் பொழப்பு ஓடிட்டு இருக்கா – கடும் கோபத்தில் ரசிகர்கள்
- மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை-பிரபல நடிகர் கைது
- ‘அடடா என்ன ஒரு அழகு’ மாடர்ன் உடையில் மாஸாக போஸ் கொடுத்த ப்ரியங்கா மோகன்- கியூட் கிளிக்ஸ்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!