• Sep 20 2024

'சுப்பிரமணியம் அஜித் எனும் நான்' - ஒரே ஒரு வீடியோவால் அஜித்தை முதல்வர் ஆக்கிய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகரான அஜித் தற்பொழுது ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பானது ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தை அடுத்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பானது விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் அஜித் தற்பொழுது ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்றுள்ளார். அங்கு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் வீடியோ, நடந்து செல்லும் வீடியோக்கள் எல்லாம் வைரலாகி வந்தன.அஜித்துக்கு இதுபோன்ற பப்ளிசிட்டியே பிடிக்காது, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சர்வ சாதாரணமாக வெளியிட அவர் அனுமதிக்கவே மாட்டார் என்கிற நீண்ட கால கட்டுப்பாடுகள் எல்லாம் இப்போது நீக்கிவிட்டார்.

இவரது வீடியோக்கள் போட்டோக்கள் என்பன அதிகளவு வெளியாகி வருவதைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் அவரை நேரடியாக வம்பிழுத்து ட்ரோல் செய்து வருகின்றனர். ரசிகர்களுடன் அஜித் தொடர்ந்து எடுத்து வரும் புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், ரசிகர் ஒருவருக்கு நடிகர் அஜித் கைப்பட எழுதிய வாழ்த்து கடிதம் வீடியோவாக வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் அஜித்தை தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகவே மாற்றி 'சுப்பிரமணியம் அஜித் எனும் நான்' என நடிகர் அஜித் முதல்வர் சீட்டில் அமர்ந்து கையெழுத்து போடுவது போன்ற எடிட்டை அவரது ரசிகர்கள் உருவாக்கி சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement