தமிழ் சினிமாவில் கருப்பு எம்ஜிஆர் என்று அன்போடு அழைக்கப்படுபவர் கேப்டன் விஜயகாந்த்.தான் ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் சாதாரண மனிதனாகவே வாழ்ந்து வந்ததோடு யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பவர்.
அத்தோடு யாருக்காவது என்ன உதவி வேண்டுமானாலும் நேரம் பாராமல் விரைந்து செய்வதில் வல்லவர்.எல்லாவற்றிற்கும் மேலாக பசியை போக்குவதை குறிக்கோளாக கொண்டார். தனக்கு வரும் உணவுதான் ஊழியர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்று சொந்த செலவிலேயே உணவை வழங்கினார்.
இப்படிபட்ட மனிதனை அந்த ஒரு விஷயத்தில் பார்த்தால் எனக்கு பயம் என்று நடிகை ரம்பா ஒரு இன்டர்வியூவில் தெரிவித்திருந்தார்.இதாவது ரம்பாவும் விஜயகாந்தும் இணைந்து தர்மச்சக்கரம் என்னும் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பானது பொள்ளாச்சி போன்ற ஏரியாக்களில் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம்.
அந்த நேரங்களில் மிகவும் கடுமையாக கூட்டம் அலைமோதுமாம். அதனாலேயே அதிகாலையில் படப்பிடிப்பை திட்டமிடுவார்களாம்.பொதுவாக காலை 6 அல்லது 7 மணிக்குத்தான் படப்பிடிப்பை நடத்துவார்களாம். ஒரு சமயம் விஜயகாந்த் ரம்பாவிடம் எத்தனை மணிக்கு சூட்டிங் வருவாய் என்று கேட்டாராம். அதற்கு ரம்பா 7 மணிக்குத்தானே என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கேப்டனோ நான் 4.30மணிக்கு எல்லாம் வந்து விடுவேன், நீ அதே போல் வரமுடியுமா? என்று கேட்க
அதற்கு ரம்பா 6,7 மணிக்கு தானே சூட்டிங், அதுக்கு எதுக்கு 4.30மணிக்கு என்று நினைத்துக் கொண்டு மறு நாள் போயிருக்கிறார். சொன்னபடி விஜயகாந்த் 4.30மணிக்கு எல்லாம் வந்து உட்காந்திருக்கிறாராம். இதை பற்றி கூறிய ரம்பா நேரம் விஷயத்துல தான் விஜயகாந்தை நினைத்தால் எனக்கு கொஞ்சம் பயம் என்று கூறியிருந்தார்.
Listen News!