தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக இருந்தவர் தான் ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனை அடுத்து விஜய்,சூர்யா,ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல்யமானார்.திருமணத்தின் பின்னர் சில காலம் விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடித்து வருகின்றார்.
ஜோதிகாவுக்கு பலமே அவரின் துரு துரு பேச்சும் முக பாவனையும் தான். எக்ஸ்பிரசன் குயின் என்று பெயர் எடுத்த இவரது கெரியரில் முக்கியமான திரைப்படம் தான் சந்திரமுகி. இப்படத்தில் சந்திரமுகி என்னும் பேயாகவே மாறி அனைவரையும் மிரள வைத்தவர். ஆரம்பத்தில் ஜோதிகாவா இந்த கதாபாத்திரத்தை செய்ய போகிறார் என்ற பயம் இருந்தது.
ஆனால் அதை ஒரு சவாலாக ஏற்று அனைவருடைய பாராட்டையும் பெற்றார். குறிப்பாக ரா ரா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் காலங்காலமும் நிலைத்து நிற்கும். எந்த நடிகையும் நடிக்க தயங்கிய படம். ஆனால் ஜோதிகா ஏற்று நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது.
அந்தப் பாடலுக்கு நடனம் ஆடும் போது கூட நடிகர் வினித்தும் ஆடுவார். முதலில் வினித்தை பார்த்ததும் ஜோதிகா பயந்தாராம். அதன் பின் கலா மாஸ்டர் ‘அவர் ஒரு க்ளாஸிக் டான்சர். அவரை பார்த்து நீ பயப்படக் கூடாது. உன்னால் எது முடியுமோ அதை செய்’ என்று சொன்னாராம்.
இருந்தாலும் இவ்ளோ க்ளாஸிக் வேண்டாம் மாஸ்டர் என்று ஜோதிகா சொல்லியும் ‘ நீ மட்டும் நல்லா ஆடி முடித்தால் உனக்கு ஒரு சூப்பர் சேலை ஒன்று வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லியே ஆட வைத்தாராம் கலா மாஸ்டர். அதன் பின் படமும் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்ற நிலையில் கலா மாஸ்டருக்கு ஜோதிகா ஒரு வைர வளையல் வாங்கிக் கொடுத்து கௌரவப்படுத்தினாராம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!