சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பான் இந்தியத் திரைப்படங்களாகவே வெளிவருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர்.
இந்தப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். மிகப் பிரமாண்டமாக உருவாகிய இப்படம் உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்ததுடன் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் சாதனையையும் படைத்தது.
இந்த படத்தை சமீபத்தில் பிரபல ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளரான ராபர்ட் கார்கில் பார்த்துள்ளார். ராபர்ட் கார்கில் ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர்ஹீரோ படமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மற்றும் சினிஸ்டர் படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியவர்.
ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த அவர் “இதுவரை நான் பார்த்த படங்களிலேயே மிகவும் வெறித்தனமான, நேர்மையான வித்தியாசமான ப்ளாக்பஸ்டர் திரைப்படம் RRR.நண்பர்கள் அழைப்பின் பேரில்தான் இந்த படத்தை பார்க்க சென்றேன். இப்போது நானும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்” எனக் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!