தமிழ் சினிமாவில் டான்ஸராக அறிமுகடாகியவர் தான் ராகவா லாரன்ஸ். அதன்படிபார்த்தேன் ரசித்தேன், பார்த்தாலே பரவசம் படங்களில் நடித்து நடிகராகவும் மாஸ் காட்டினார். தொடர்ந்து ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கிய அவர், 2004ல் தெலுங்கில் வெளியான மாஸ் படத்தின் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்தார்.
பின்னர் முனி, காஞ்சனா படங்களின் மூன்று பாகங்களையும் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்து பிரமிக்க வைத்தார். இந்நிலையில், தற்போது 5 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். அதன்படி, அவரது நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன், சந்திரமுகி 2, ஜிகர்தண்டா 2, துர்கா, அதிகாரம் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.
இதில் ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ருத்ரன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 1962ல் வெளியான வீரத் திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை ருத்ரன் படத்திற்காக ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளது படக்குழு.
ஒரிஜினல் பாடாத பாட்டெல்லாம் பாடலுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஜோடி இசையமைத்திருந்தது. தற்போது ருத்ரனுக்காக அந்தப் பாடலை தரன்குமார் ரீமிக்ஸ் செய்துள்ளார். ஸ்ரீதர் மாஸ்டர் கோரியோகிராபியில் ராகவா லாரன்ஸும் பிரியா பவானி சங்கரும் நடனமாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!