லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் நடைபெற்று வருகின்றது.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
அண்மையில் பாலிவூட் நடிகர் சஞ்சய் தத் இப்படப்பிடிப்பில் இணைந்தார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்பன வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் என்பதினால் தொடர்ந்து லியோ படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாம்.ஆனால், அவருக்கான கதாபாத்திரத்தின் படத்தில் வலுவாக இல்லை என்பதினால் லியோ படத்தை நிராகரித்துவிட்டாராம் சாய் பல்லவி. இந்த செய்தி தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்து வருகின்றார்.14 வருடத்திற்குப் பின் விஜய் த்ரிஷா கூட்டணி ஒன்று சேர்ந்ததால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!