தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ப்ரியங்கா அருள் மோகன். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் டான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
டான் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து, இயக்குநர் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள “கேப்டன் மில்லர்” படத்தில் ப்ரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவிருந்ததாகவும் ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, ப்ரியங்கா மோகன் சில காரணங்களால் படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம்.
ஆனால், தனுஷ் படத்திற்கு நோ சொல்லிவிட்டு தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் செய்திகள் ஒன்று இணையத்தில் உலாவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- நயன் திருமணத்தில் முன்னாள் காதலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதா; ஆசைக் காதலிக்கு என்ன பரிசு தெரியுமா..?
- விஜய்யின் அப்பாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வரும் புகைப்படம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!