• Nov 14 2024

'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் நடிகர் தீபக்கிற்கு இப்படி ஒரு அழகிய மனைவியா.. நம்பவே முடியல..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பல ஹிட் சீரியல்களை ரசிகர்களுக்கு கொடுத்த என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'தமிழும் சரஸ்வதியும்'. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து பல ரசிகர்களின் மனங்களை ஈர்த்து வருபவர் தான் நடிகர் தீபக்.


இவர் ஒரு சின்னத்திரை நடிகர் மட்டுமல்லாது, பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக தொகுத்து வழங்கியும் இருக்கிறார். அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஜோடி நம்பர் 1' உள்ளிட்ட நிகழ்ச்சியை உதாரணமாக கூறிக் கொள்ளலாம்.


இருப்பினும் இவருக்கு சின்னத்திரையில் ஒரு சிறந்த அடையாளத்தைக் கொடுத்தது என்றால் அது 'தென்றல்' என்ற சீரியல் தான். இந்த சீரியலானது சன் டிவியில் பல ஆண்டுகள் சூப்பர்ஹிட்டாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து தீபக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது தான் 'தமிழும் சரஸ்வதியும்' எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தீபக்கின் குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு சிவரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது வளர்ந்த ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் தீபக் தனது மனைவி மற்றும் மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement