மகான்கள், வள்ளல்கள் போன்ற பல பிரபலங்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான சம்பவங்களை வைத்து பல புராணக்கதைகளும், இதிகாசங்களும், காவியங்களும் உருவாகின்றன.
அந்த வரிசையில் பஞ்ச பாண்டவர்கள், மற்றும் கௌரவர்களுக்கு இடையிலான நிகழ்வுகளை மையமாக கொண்டு எழுந்த ஒரு மாபெரும் காவியமே மகாபாரதம்.
இந்தக்காவியம் ஆனது படமாக்கப்பட்டு பல மொழிகளிலும் ஒளிபரப்பானமை குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தமிழில் விஜய் தொலைக்காட்சியிலும் அந்த மகாபாரதத் தொடர் ஒளிபரப்பாகி இருந்தது.
அதாவது அக்டோபர் 7-2013 முதல் ஒளிபரப்பான ஒரு புராண தொன்மவியல் காவியமாக இந்த தொடர் அமைந்திருந்தது. அதுமட்டுமல்லாது இக்காவியம் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் இந்திய தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கவர்ந்த கதாபாத்திரமாக கிருஷ்ணரின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. இதில் நடித்தது ஒருவராக இருந்தாலும், அதற்கான குரலினை வழங்கியவர் இன்னொருவர். அந்தக் குரல் பல்லாயிரக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் இன்றும் மறக்க முடியாத அளவிற்கு குடி கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் அந்த குரலிற்கு சொந்தக்காரர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஆம், அது வேறு யாரும் இல்லை, நடிகர் தசரதியே தான். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான 'ஈரமான ரோஜாவே 2' இல் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகின்றார்.
இந்த சீரியலின் பாகம் 1 மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்ததன் காரணமாக தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'ஈரமான ரோஜாவே 2' ஒளிபரப்பாகி வருகின்றது.
இதில் கதாநாயகனுக்கு தந்தையாக நடிகர் தசரதி நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலும் தற்போது பல்லாயிரக் கணக்கான ரசிகர்களிடமிருந்தும் வரவேற்பினை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!