• Sep 20 2024

''இத்தனை கோடிய என்னால கட்ட முடியாது''.. ஜிவி பிரகாஷ் மீது உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக வெயில் என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.

இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நிறைய படங்களில் இசை அமைத்து இருக்கிறார். பின் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். 

இந்த நிலையில் சேவை வரி செலுத்தாது குறித்து ஜிஎஸ்டி ஆணையர் ஜிவி பிரகாஷ் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, இசை படைப்புகளுக்காக ஜி.வி.பிரகாஷ் அவர்கள் சேவை வரி என்ற பெயரில் 1.84 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசை எதிர்த்து ஜிவி பிரகாஷ் குமாரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். 

இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி , ஜிவி பிரகாஷ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஜிஎஸ்டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீஸ்க்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து ஜிவி பிரகாஷ் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் அவர், இசை படைப்புகளின் காப்புரிமையை பட தயாரிப்புகளுக்கு நிரந்தரமாக வழங்கப்படுகிறது. அதன்பின் உரிமையாளர்கள் அவர்கள் தான். என்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் என்று கூறியிருந்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக்கு அமரவும் முன்பு விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக நான்கு வாரங்களில் ஜிஎஸ்டி இணை ஆணையர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement