விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம், கடந்த மாதம் திரையரங்குகளில் ரிலீஸானது. பான் இந்தியா படமாக வெளியான லியோ, உலகம் முழுவதும் 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், விஜய், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், லோகேஷ் கனகராஜ், லலித் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், "இங்கே பேசுவதற்காக நான் எதையும் தயார்செய்துவிட்டு வரவில்லை. நன்றி சொல்ல மட்டுமே வந்தேன். விஜய்ண்ணா, லலித் சார், ஜெகதீஷ் சார், பத்திரிகையாளர்கள், லியோ படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார். மேலும், இந்தப் படத்தின் எடிட்டிங் நடக்கும் போது, என்னுடைய அசிஸ்டெண்ட் இயக்குநர்கள் அனைவரும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஸ்டுடியோவின் மாடிப்படியில் தான் படுத்திருந்தனர் என்றார்.
முக்கியமாக லியோவில் வெற்றிமாறன் சாரை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் அது முடியவில்லை என்றார். லோகேஷ் இயக்கிய இன்னொரு படத்திலும் வெற்றிமாறனை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்தாராம். லியோ குடும்பங்கள் கொண்டாடும் கேங்ஸ்டர் படம். விஜய்ண்ணா ஓக்கே சொன்னால் லியோ 2ம் பாகம் உருவாகும்.
முதன்முறையாக நான் இயக்கிய படத்தின் வெற்றி விழா மேடையில் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Listen News!