• Nov 10 2024

இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை- ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்த ப்ஃரீ அட்வைஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி.இதனைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.இப்படங்களின் மூலம் சிறந்த நடிகராக அறியப்பட்டார்.

கிராமத்துக் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திய விஜய் சேதுபதி, 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து றெக்க படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அறியப்பட்டார்.

எதார்த்தமாக நடித்து தனக்கென ஒரு தகுதியையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ள இவர் தற்பொழுது கதாநாயகனாக மட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களிலும் வில்வன் கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்திருந்த பேட்டியில் உங்கள் ரசிகர்களிடத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது அவர் கூறியிருப்பதாவது சோஷியல் மீடியாக்களில் ஒரு ஹீரோவை பற்றி பேசும்போது ரசிகர்களிடையே சண்டை வருகின்றது. சண்டை போட்டுக் கொள்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கேவலமாக பேசுகின்றனர்.

இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நாங்கள் படம் நடிக்கின்றோம் , நன்றாகவே வளமாக இருக்கின்றோம். எங்களுக்காக நீங்கள் சண்டை போட்டுக் கொள்வதும், குடும்பத்தினரை கேவலமாக பேசிக்கொள்ளவோ வேண்டாம், யார் யாரையும் கேவலமாக பேசுவதோ, சண்டை போடுவதோ வேண்டாம் என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பிற செய்திகள்

ஐ லவ் யூ டா அமீர்- ஒருவழியாக காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிக்பாஸ் பாவானி 

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement