• Sep 20 2024

படம் பார்த்த எனக்கு கார் இல்லையா?- ஜெயிலர் படத்தை மோசமாக விமர்சித்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஜெயிலர் படம் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த நிலையில் சமீபத்தில் தான் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

படம் அதிகம் லாபம் கொடுத்த நிலையில் ரஜினி, நெல்சன்,அனிரூத் ஆகியோருக்கு சொகுசு கார் மற்றும் லாபத்தில் பங்கு செக் ஆகியவை கொடுக்கப்பட்டது.இதனை அடுத்து நேற்றைய தினம் ஜெயிலர் படத்தில் பணியாற்றிய படக்குழு 300 பேரை வரவைத்து விழா நடத்தி அனைவருக்கும் தங்கக் காசினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கியிருந்தது.


தற்போது ஜெயிலர் படம் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில், அரசியல்வாதியான கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக படத்தை விமர்சித்து இருக்கிறார்."நேற்று இரவு ஒரு தமிழ் திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பார்த்ததற்கு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்திருக்க வேண்டும்" என அவர் கலாய்த்து இருக்கிறார்.

மேலும் இது தவிர படம் ஹிட்டாவதற்கு காரணமே தமன்னா தான்,அவருக்கு கார் கொடுக்கமாட்டீங்களா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement