நடிகர் விஜய் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். இப்படமானது அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பான் இந்தியத்திரைப்படமாக உருவாகுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகின்றார்.இதில் விஜய் உடன் அர்ஜுன், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு லேகேஷ கனகராஜ் நடிகர் விஷாலையும் கேட்டிருந்தாராம்.ஆனால் விஷால் இப்படத்தில் நடிக்க மறுப்புத் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில் இதற்கான காரணத்தை விஷால் தெரிவித்துள்ளார். அதாவது மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடித்துக் கொண்டிருக்கும் போது லோகேஷ் அந்த படப்பிடிப்பிற்கு சென்று லியோ படத்தில் கால் சீட் கேட்டிருக்கிறார்.அதுவும் தொடர்ந்து நான்கு மாதங்கள் வேண்டும் என்று சொன்னாராம். உடனே விஷால் ஒரே நேரத்தில் இரண்டு படத்தில் நடிக்கும் அளவுக்கு நான் திறமைசாலி கிடையாது.
அதனால் தான் லியோ படம் மிஸ் ஆயிடுச்சு என்று சமீபத்திய பேட்டி தெரிவித்துள்ளார்.இதைக் கேட்டதும் ரசிகர்கள் பலரும், ‘ஆமா லியோ படத்தை விட வேறு நல்ல படத்துல நடிச்சு கிழித்து விடுற மாதிரி பேசுறத பாரு’ என சோசியல் மீடியாவில் விஷாலை வெளுத்து வாங்குகின்றனர். இவர் நடிப்பில் உருவானமார்க்ஆண்டனி திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!